2032ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ணில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் 3.5 பில்லியன் டாலர் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்காக மாநிலத்துக்கு வரும் வீரர், வீராங்கனைகள் தங்கும் வகையில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள தடகள கிராமங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
16,000 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகளுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
இதன் கீழ் பிரிஸ்பேர்ண், கோல்ட் கோஸ்ட் மற்றும் சன்ஷைன் கோஸ்ட் ஆகிய பிரதேசங்களில் 4 தடகள கிராமங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.