தெற்கு ஆஸ்திரேலியாவில் தக்காளித் தொழிலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு தாவர வைரஸ் விக்டோரியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
Goulburn பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு கிரீன்ஹவுஸில் Tomato Brown Rugose Fruit வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியா மாநில வேளாண்மைத் துறை (Agriculture Victoria) அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் பயிர்களுக்கு பரவாமல் தடுக்க தேவையான தனிமைப்படுத்தல் முறைகளை மாநில அதிகாரிகள் ஏற்கனவே தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.
5 மாதங்களுக்கு முன்னர், தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் அதிகளவு தக்காளி பயிரிடும் நிறுவனமாக கருதப்படும் Perfection Fresh உட்பட 3 பண்ணைகளில் இருந்து இந்த வைரஸ் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான வைரஸ் தாக்கத்தால் தக்காளி, காஸ்பியம், மிளகாய் உள்ளிட்ட பல பயிர்களின் விளைச்சல் 70% குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விக்டோரியா மாநிலத்தில் வைரஸ் இன்னும் பரவவில்லை என்று தான் நம்புவதாக மாநிலத்தின் தலைமை தாவர சுகாதார அதிகாரி ரோசா குரோனோ வலியுறுத்தியுள்ளார்.
நிலைமையை நிர்வகிக்க விக்டோரியா மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலிய பதப்படுத்துதல் மற்றும் தக்காளி கவுன்சில் கூறியுள்ளது.