மெல்பேர்ணில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஒரு பொதுவான வகை மார்பக புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய சிகிச்சை முறை குறித்த ஆராய்ச்சியை மெல்பேர்ணில் உள்ள பீட்டர் மெக்கலம் புற்றுநோய் மைய ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் மீண்டும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது என தெரியவந்துள்ளது.
புதிதாக கண்டறியப்பட்ட 500 க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.
அதன்படி, அறுவை சிகிச்சைக்கு முன்னதாக நோயாளியின் உடலில் இருக்கும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறதா என்பதை அறிய, கீமோதெரபி முறையில் நோயெதிர்ப்பு சிகிச்சை மருந்து சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வு முடிவு மூலம், புதிய சிகிச்சை முறை மூலம் நோயாளிகள் குணமடையும் விகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
டாக்டர் ஷெரீன் லோய், புதிய சிகிச்சை முறை ஒரு அற்புதமான முன்னேற்றமாக இருக்கும் என்று மேலும் வலியுறுத்தியுள்ளார்.