அடுத்த 3 நாட்களில் நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிஸ்பேனில் வசிப்பவர்கள் 36 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிக வெப்பநிலையை பதிவு செய்வார்கள் என்று வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எவ்வாறாயினும், இந்த வார இறுதியில் குயின்ஸ்லாந்தின் கிழக்குப் பகுதிகளில் வெப்பநிலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் ஊடாக சேதப்படுத்தும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான நாட்களில் மக்கள் முடிந்தவரை தண்ணீர் குடிக்கவும், கடுமையான நடவடிக்கைகள் மற்றும் வெப்பமான காலநிலையில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.