குயின்ஸ்லாந்தில் உள்ள கன்னிங்ஹாம் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்கலன் பாரவூர்தியும் காரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதுடன், நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளை கண்டறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.