அவுஸ்திரேலியாவின் சிவப்பு இறைச்சித் தொழிலின் வெற்றியைக் கொண்டாடுவதற்கு அவுஸ்திரேலியா தினம் பொருத்தமானது என விவசாய அமைச்சர் கூறுகிறார்.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மாட்டிறைச்சி ஏற்றுமதி 24 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அதன் வருமானம் 94 பில்லியன் டொலர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆட்டுக்குட்டி இறைச்சி ஏற்றுமதி 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அது அறு இலட்சத்து நான்காயிரம் டன்கள் எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆட்டிறைச்சி ஏற்றுமதி 22 சதவீதம் என்ற சாதனையை எட்டியிருப்பதாகவும், அது இரு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் டன்கள் என்றும் அறிக்கைகள் காட்டுகின்றன.
.
உலகெங்கிலும் உள்ள நுகர்வோர்கள் ஆஸ்திரேலிய உணவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இந்தத் தரவு காட்டுகிறது என்று விவசாய அமைச்சர் ஜூலி காலின்ஸ் மேலும் கூறினார்.
சீனா, யுனைடெட் கிங்டம், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடனான புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்றுமதி நிலைமையை அதிகரிக்க வழிவகுத்தன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.