விக்டோரியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆஸ்திரேலியா தினத்துடன் இணைந்த நீண்ட வார இறுதியில் வெப்பமான வானிலை முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை மெல்பேர்ணில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும் என்று கூறப்படுகிறது .
மேலும் இதன் காரணமாக விக்டோரியாவில் மீண்டும் காட்டுத் தீ ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த வார இறுதியில் பலர் பல்வேறு வெளிப்புற நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக நேரடி சூரிய ஒளி பட வேண்டாம் என சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக விக்டோரியாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக காட்டுத் தீ அபாயம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.