காட்டுத்தீயின் விளைவாக, மேற்கு ஆஸ்திரேலியாவில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பெர்த் நகரம் முழுவதும் கடும் இருள் சூழ்ந்துள்ளதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
கடுமையான வெப்பநிலை மற்றும் தூசி கலந்த ஈரமான வானிலை நிலைமையை ஏற்படுத்தியதாக தீயணைப்புப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் மின்சாரம் தேவைப்படும் தொழில்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வணிக உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாலைக்குள் பல பகுதிகளில் மின்சாரம் விநியோகிக்கப்படும் என மின்விநியோகத் துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய முடிந்த அனைத்தையும் செய்வதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.