Newsமஸ்க்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் பிரிட்டிஷ் அரசியல் குழு

மஸ்க்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் பிரிட்டிஷ் அரசியல் குழு

-

தீவிர வலதுசாரிக்கு ஆதரவளிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்களை யாரும் வாங்க வேண்டாம் என்று பிரிட்டிஷ் அரசியல் பிரசாரக் குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜேர்மனி, பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா முதலான பல நாடுகளில் புலம்பெயர்ந்தோரை எதிர்க்கும் தீவிர வலதுசாரியினருக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். இதனிடையே, சமீபத்தில் கிழக்கு ஜேர்மனியின் ஹாலேவில் நடைபெற்ற தீவிர வலதுசாரி கட்சியான ஜேர்மனி மாற்று கட்சியின் பரப்புரையிலும் காணொலி மூலம் எலான் மஸ்க் உரையாற்றினார்.

இதற்கு முன்னதாக, எலான் மஸ்க்கின் செயலைக் குறிப்பிட்டு, ஜேர்மனியில் கருத்துச் சுதந்திரம் இருந்தாலும், தீவிர வலதுசாரியை ஆதரிப்பதை ஏற்க முடியாது என்று ஜேர்மன் ஜனாதிபதி ஓலப் ஸ்கோலஸ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தீவிர வலதுசாரியை ஆதரிக்கும் எலான் மஸ்க்கை எதிர்க்கும் விதமாக, அவரது நிறுவனத் தயாரிப்பு கார்களை வாங்க வேண்டாமென பிரிட்டிஷ் அரசியல் பிரசாரக் குழுவினர் வலியுறுத்தினர்.

அதுமட்டுமின்றி, ஜேர்மனி தலைநகர் பேர்லின் அருகேயுள்ள டெஸ்லா கார் தொழிற்சாலையின் சுற்றுச் சுவரில் “எலான் மஸ்க்கால் ஐரோப்பிய ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவரது டெஸ்லா நிறுவனக் கார்களை யாரும் வாங்க வேண்டாம். டெஸ்லா காரை நீங்கள் வாங்கினால், வலதுசாரியினருக்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள் என்று பொருளாகிவிடும்’’ என்ற வாசகத்துடன் குறும்படத்தையும் திரையிட்டனர்.

Latest news

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...

பேரழிவு சூழ்நிலை காரணமாக பல V/Line சேவைகள் ரத்து

ஜனவரி 9, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் வட மத்திய, வடக்கு நாடு, தென்மேற்கு மற்றும் Wimmera மாவட்டங்களுக்கு பேரழிவு தரும் தீ ஆபத்து மதிப்பீடுகள் இருக்கும் என்று...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

பெர்த்தில் நேருக்கு நேர் மோதிய இரு மோட்டார் சைக்கிள்கள் – ஓட்டுநர்கள் பலி

பெர்த்தின் மேற்கு புறநகர்ப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். Wembley-இல் உள்ள Pangbourne தெருவுக்கு அருகிலுள்ள Grantham தெருவில் இரவு 10.50...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...