விக்டோரியாவில் காலியாக உள்ள கடைகளின் சொத்து உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் புதிய வரிக்கு லிபரல் கட்சி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
பசுமைக் கட்சி சமீபத்தில் காலி கடைகளை மீண்டும் திறக்கும் நோக்கத்துடன் அதன் உரிமையாளர்களுக்கு புதிய வரி விதிக்க முன்மொழிந்தது.
ஆனால் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு சிறு வணிக உரிமையாளர்களுக்கு இத்தகைய நடவடிக்கை நியாயமற்றது என்று லிபரல் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
அடுத்த மாதம் மெல்பேர்ண் தெற்கு பிராந்தியத்தில் பிரஹ்ரான் ஆசனத்தில் நடைபெறவுள்ள தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்ட பிரச்சார நிகழ்ச்சியின் போதே லிபரல் கட்சி இதனை வலியுறுத்தியுள்ளது.
தொடர்ந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக காலியாக உள்ள சொத்துகளுக்கு 2 சதவீத புதிய வணிக வரி அறிமுகப்படுத்தப்படும் என்று பசுமைக் கட்சி தெரிவித்துள்ளது.