Newsகிறீன்லாந்தை கையகப்படுத்த திட்டமிடும் ட்ரம்ப்

கிறீன்லாந்தை கையகப்படுத்த திட்டமிடும் ட்ரம்ப்

-

கிறீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல என அமெரிக்க ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென்.

டென்மார்க்கின் ஓர் அங்கமாக தன்னாட்சி பெற்ற பிராந்தியமாகத் திகழும் கிறீன்லாந்து தீவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விலைக்கு வாங்கப்போவதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், மேற்கண்ட இவ்விரு தலைவர்களுக்குமிடையிலான தொலைபேசி உரையாடலின்போது, அமெரிக்க தேசியத்தின் பாதுகாப்புக்காக ஆர்டிக் பிராந்தியமான கிறீன்லாந்தின் முக்கியத்துவம் குறித்து டென்மார்க் பிரதமரிடம் ட்ரம்ப் எடுத்துரைத்ததாக ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின்போது, கிறீன்லாந்து விவகாரத்தில் இராணுவ தளபாடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரந்தளவிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த டென்மார்க் தயாராக இருப்பதாக ட்ரம்பிடம் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென் எடுத்துக் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், டென்மார்க்கின் வாதத்தை ஏற்க டொனால்ட் ட்ரம்ப் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிறீன்லாந்து தீவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ட்ரம்ப் முனைப்பு காட்டி வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...