Newsமகா கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடிய 13 கோடி பேர்

மகா கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடிய 13 கோடி பேர்

-

மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 13 கோடி பேர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர். மஹா கும்பமேளா நிகழ்ச்சியில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறையில் உணவுகள் தயாரித்து தினமும் ஒரு இலட்சம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

உத்தரபிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ஆம் திகதி தொடங்கியது. பிப்ரவரி 26ஆம் திகதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இதுவரை சுமார் 13 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒரே நாளில் அதிகபட்சமாக 46 இலட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹா கும்பத்தில் தினமும் 1 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு உணவளிக்கும் வகையில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அன்னதானம் குழு அதிகாரி ஒருவர்

”எங்களிடம் நிறைய இயந்திரங்கள் மற்றும் ஆட்கள் வேலை செய்கிறார்கள். இங்கு 500க்கும் மேற்பட்டோர் உணவு சமைக்கிறார்கள். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உணவு பரிமாறுகிறார்கள்.

எங்களிடம் 2,000 கழிப்பறைகள், தண்ணீர் வசதிகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய குளியலறை உள்ளது. சமையலறையில் ஒரே நேரத்தில் 2,000 சப்பாத்திகளை தயாரிக்கும் திறன் கொண்ட மேம்பட்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அதிக அளவு காய்கறிகளை வெட்டுவதற்கான இயந்திரங்களும் உள்ளன”. என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸின் Albay மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு...

எடை இழப்பு மருந்துகளை நிறுத்திய பிறகு என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்ட எடை இழப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்த புதிய ஆய்வை பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்திய...

வட கரோலினாவில் பிரபல நீச்சல் தலத்திற்கு அருகில் மிகப்பெரிய முதலை கண்டுபிடிப்பு

மழைக்காலத்தின் உச்சத்தில் வடக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான நீச்சல் இடத்திற்கு அருகில் 4.9 மீட்டர் உயரமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. டார்வினுக்கு தெற்கே சுமார் 150...