Newsதைவானில் பச்சோந்திகளை கொல்ல அதிரடி உத்தரவு

தைவானில் பச்சோந்திகளை கொல்ல அதிரடி உத்தரவு

-

தைவானில் உள்நாட்டு விவசாயத்தை அதிகளவில் சார்ந்துள்ள நாடு தைவானில் 1.2 லட்சம் பச்சோந்திகளைக் கொல்லும் முடிவை தைவான் அரசு அறிவித்துள்ளது.

அங்கு பெரியவகை பச்சோந்திகளின் (green iguanas) (பச்சை உடும்புகள்) எண்ணிக்கை அதிகரிப்பால் அந்நாட்டின் விவசாயம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

இதனால் 1.2 லட்சம் பச்சோந்திகளை கொல்லும் முடிவை தைவான் அரசு அறிவித்துள்ளது.

தைவானின் வனவியல் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, தீவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சுமார் 2,00,000 பெரியவகை பச்சோந்திகள் இருக்கின்றன. கடந்த ஆண்டு சுமார் 70,000 பெரியவகை பச்சோந்திகளை சிறப்பு வேட்டை குழுவினர் கொன்றனர்.

ஒரு பச்சோந்தியை கொல்வதற்கு தலா 15 டாலர்கள் அவர்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு 1.2 லட்சம் பச்சோந்திகளைக் கொல்ல தைவான் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இவ்வகை பச்சோந்திகள் வாழும் கூடுகளை இனங்காண உள்ளூர் மக்கள் உதவ வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரியவகை பெண் பச்சோந்திகள் ஒரே நேரத்தில் 80 முட்டைகள் வரை இடும்.

அவை 20 ஆண்டுகள் வரை வாழும். சுமார் 5 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கும். தற்போது 1.2 லட்சம் பச்சோந்திகளைக் கொல்ல அரசு முடிவெடுத்துள்ள நிலையில் மீன்பிடி ஈட்டிகளைப் பயன்படுத்துவது அவற்றை கொல்ல மிகவும் ‘மனிதாபிமான வழி’ என்று கூறியுள்ளது.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...