Newsஜனாதிபதி ட்ரம்ப் வெளியிடும் அறிவிப்புகளுக்கு அவசரம் காட்ட வேண்டாம் - உலக...

ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிடும் அறிவிப்புகளுக்கு அவசரம் காட்ட வேண்டாம் – உலக வங்கி தலைவர்

-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளியிடும் அறிவிப்புகள் உடனடியாக பதிலளிக்காமல் பொறுமையாக ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் செயல்பட உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக கடந்த 20ஆம் திகதி பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப், அதன்பின் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அதிரடி அறிவிப்புகள் பல உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, “உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்லும் ஒரே அறிவுரை இதுதான்.. எந்தவொரு முடிவுக்கும் வரவோ அல்லது பதிலளிக்கவோ அவசரம் காட்டாதீர்..” என்று தெரிவித்துள்ளார்.

டான்ஸானியா நாட்டில் நடைபெற்ற ’மிஷன் 300 ஆப்பிரிக்க எரிசக்தி மாநாட்டில்’ பங்கேற்ற அஜய் பங்கா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தெந்த கொள்கைகளெல்லாம் செயல்படுத்தப்படுகின்றன என்பதை கொள்கை வகுப்பாளர்கள் பொறுத்திருந்து பார்த்து அதன்பின் செயல்படவும். டொனால்ட் ட்ரம்ப்புடன் சேர்ந்து நான் கடந்த காலங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் நடைமுறை சாத்தியக்கூறுகளுகளை அறிந்து செயல்படும் ஒரு மனிதர்.

அமெரிக்க அரசுப் பணியாளர்கள் வாரத்தில் 5 நாள்கள் அலுவலகங்களுக்கு வருகை தர டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், உலக வங்கியில் பணியாற்றும் பணியாளர்கள் வாரத்தில் 4 நாள்கள் அலுவலகங்களுக்குச் சென்று பணியாற்றும் நடைமுறையில் எவ்வித மாற்றமுமில்லை. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...