NewsTikTok சமூக ஊடக வலையமைப்பை வாங்க எலோன் மஸ்க் முயற்சி

TikTok சமூக ஊடக வலையமைப்பை வாங்க எலோன் மஸ்க் முயற்சி

-

TikTok சமூக ஊடக வலையமைப்பை வாங்க டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் முயற்சித்துள்ளார்.

மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் ஜிம் டோனல்சன் மற்றும் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவர் லாரி எலிசன் ஆகியோர் இதற்கான ஏலத்தை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் TikTok-ஐ தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், TikTok செயலியை இன்னும் 75 நாட்களுக்கு நாட்டில் தொடர்ந்து செயல்பட அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதித்தார்.

இதற்கிடையில், உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் எலோன் மஸ்க்கிற்கு TikTok சமூக ஊடக வலையமைப்பை விற்க சீனா பரிசீலித்து வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், X சமூக ஊடக வலையமைப்பு சீனாவில் இயங்காதது தொடர்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என எலோன் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.

TikTok சமூக ஊடக வலையமைப்பை எலோன் மஸ்க் அல்லது லாரி எலிசன் வாங்க முடிவு செய்தால் அதை விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...