Cinemaஇயக்குனராகும் 'லப்பர் பந்து' நாயகி

இயக்குனராகும் ‘லப்பர் பந்து’ நாயகி

-

‘லப்பர் பந்து’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை இயக்குனராக இருப்பதாகவும், அவரது முதல் படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் நடித்த ‘லப்பர் பந்து’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் வசூலிலும் சக்கை போட்டு போட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில், இந்த படத்தின் நாயகி ஆக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி என்பவர் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்தது. ஏற்கனவே ‘வதந்தி’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார் என்பதும், தற்போது அவர் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணி புரிவதோடு, அந்த படத்தில் ஒரு கேரக்டரில் சஞ்சனா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக ஒரு கதையை எழுதி, அந்த கதைக்கான நாயகனே தேடிவந்த நிலையில், கவினிடம் அவர் சொன்ன கதை ஒர்கவுட் ஆகிவிட்டதாகவும், இதனை அடுத்து கவின் நடிக்கும் 9வது படத்தை சஞ்சனா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சஞ்சனா இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

விக்டோரியாவில் வரவிருக்கும் அவசர சிகிச்சை மருத்துவமனைகள்

நாடு முழுவதும் மேலும் 50 அவசர சிகிச்சை மருத்துவமனைகளை நிறுவுவதாக ஆளும் தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. இது மருத்துவ செலவினங்களை $8.5 பில்லியனாக அதிகரிப்பதாக...

விக்டோரியாவில் அல்பானீஸ் அரசாங்கத்தின் வாக்குப் பங்கு சரியும் அறிகுறி

விக்டோரியா மாநிலத்தில் தொழிலாளர் கட்சி 8 இடங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Ledbridge Accent தரவு அறிக்கைகளின்படி, அல்பானீஸ் அரசாங்கம் இரு கட்சி...

மெல்பேர்ணின் முக்கிய சாலைகளில் தொடரும் போலீஸ் நடவடிக்கைகள்

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய சாலையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ண் காவல்துறை நேற்றும் நேற்று முன்தினம் பிரதான மோனாஷ் தனிவழிப்பாதையில்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...

இறந்த உடலுடன் விமானத்தில் பயணித்த ஆஸ்திரேலிய தம்பதியினர்

ஒரு ஆஸ்திரேலிய தம்பதியினர் விமானத்தில் தங்கள் பக்கத்து இருக்கையில் ஒரு இறந்த உடலை வைத்திருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய தம்பதிகளான மிஷெல் ரிங் மற்றும்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...