வார இறுதியில் மெல்பேர்ணின் மேற்கில் உள்ள ஒரு வணிகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட புத்தம் புதிய கார்கள் திருடப்பட்டுள்ளன.
Laverton இல் Dohertys வீதியிலுள்ள ஒரு இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கார்களின் மதிப்பு சுமார் 1.5 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கார்கள் புத்தம் புதியவை மற்றும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 25 சனிக்கிழமை பிற்பகல் 02:00 மணி முதல் ஜனவரி 28 செவ்வாய்க்கிழமை காலை 06:00 மணி வரை இந்தக் கார்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியிருப்பாளர்கள் மேலும் ஏதேனும் தகவல் தெரிந்தால் 1800 333 000 என்ற எண்ணில் குற்றத் தடுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





