Newsதென் கொரிய தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ விபத்து

தென் கொரிய தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ விபத்து

-

தென் கொரியாவிலுள்ள தேசிய மொழி அருங்காட்சியகத்தில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு தலைநகர் சியோலின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கொரியாவின் தேசிய ஹாங்கியூல் அருங்காட்சியகத்தின் 3 ஆவது தளத்தில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த தீயானது 4ஆவது தளத்துக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பாக வெளியான CCTV காட்சிகளில் அருங்காட்சியகக் கட்டடத்திலிருந்து கருநிற புகை வெளியாவது பதிவாகியுள்ளது. கட்டடத்தினுள் சிக்கியிருந்த அருங்காட்சியக பணியாளர்கள் 4 பேரும் பத்திரமாக மிட்கப்பட்டனர்.

மேலும், அருங்காட்சியகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதினால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், மீட்புப் பணிக்காக உள்ளே சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென் கொரிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த அருங்காட்சியகத்தில் 1443 ஆம் ஆண்டைச் சேர்ந்த கொரிய மொழியின் அரிதான எழுத்துக்கள் பொறித்த பழமையான பொருள்கள் பாதுகாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest news

டிரம்பின் அறிக்கையை எதிர்க்கும் ஆஸ்திரேலிய நிபுணர்கள்

கர்ப்ப காலத்தில் Acetaminophen பயன்படுத்துவது Autism அபாயத்தை அதிகரிக்கும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் கூற்றுக்கு ஆஸ்திரேலிய நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் பாராசிட்டமால் எனப்படும் Acetaminophen-ஐ...

விக்டோரியா பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்ப திகதிகளில் மாற்றம்

விக்டோரியாவில் 2026 பல்கலைக்கழக விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி நெருங்கி வருவதாக விக்டோரியா மூன்றாம் நிலை சேர்க்கை மையம் (VTAC) அறிவித்துள்ளது. மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, விண்ணப்பங்களை...

பொழுதுபோக்குக்காக பணத்தை அதிகம் செலவிடும் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்கள் பொழுதுபோக்குக்கான தங்கள் செலவினங்களை மீண்டும் அதிகரித்துள்ளதாக UBS கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள் குறைந்த பணவீக்கம், அதிகரித்து வரும்...

டைனோசர் முட்டையில் வெளிப்படும் காலநிலை ரகசியங்கள்

சீன விஞ்ஞானிகள் குழு ஒன்று டைனோசர் முட்டைகளின் சரியான வயதை தீர்மானிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. முட்டை ஓடுகளில் உள்ள யுரேனியம் மற்றும் ஈய மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதன்...

திருடப்பட்ட கத்தியுடன் வங்கியைக் கொள்ளையடிக்கச் சென்ற பெண்

சிட்னியில் திருடப்பட்ட கத்தியைக் காட்டி வங்கியைக் கொள்ளையடிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். Kingsgrove-இல் உள்ள காமன்வெல்த் வங்கிக்குள் காலை 10 மணியளவில்...