வடக்கு குயின்ஸ்லாந்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
டவுன்ஸ்வில்லியில் இருந்து 100km தொலைவில் SES மீட்புக் குழுவினர் சென்ற படகு மரத்தில் மோதி கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று குயின்ஸ்லாந்து பிரதமர் உறுதிப்படுத்தினார்.
படகில் இருந்த மற்ற 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் விரைவில் குறையாது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குயின்ஸ்லாந்தின் வடகிழக்கு கடற்கரையில் காற்றுடன் கூடிய கடுமையான பருவமழை எதிர்பார்க்கப்படும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக டவுன்ஸ்வில் மற்றும் இங்காம் குடியிருப்பாளர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சுமார் 6 மணித்தியாலங்களில் 160mm முதல் 250mm வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
க்ளோடன், ஹெர்மிட் பார்க், இடாலியா, ஒனுன்பா, ரயில்வே எஸ்டேட் மற்றும் ரோஸ்லியா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளம் காரணமாக உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 12 மணிக்குள் தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.