Newsகுயின்ஸ்லாந்து மக்களுக்கு மற்றொரு வெள்ள அபாய எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மக்களுக்கு மற்றொரு வெள்ள அபாய எச்சரிக்கை

-

குயின்ஸ்லாந்தில் இந்த நாட்களில் கனமழை பெய்து வருவதால், வரும் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குயின்ஸ்லாந்து பிரதமர் டேவிட் கிரிசாஃபுல்லி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறும், உத்தரவை மீறி தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

வெள்ளத்தில் சிக்கி 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1200 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

டவுன்ஸ்வில்லி மற்றும் இங்காம் பகுதி மக்கள் தொடர்ந்தும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் இது குறித்து முடிந்தவரை அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிவிப்புகளை மக்கள் பின்பற்றாததே விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்று மாநில பிரதமர் கூறினார்.

குயின்ஸ்லாந்தின் மிகப்பெரிய அணையான ராஸ் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அப்பகுதிக்கு மக்கள் செல்வதைத் தடுக்கும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்வதால், மக்கள் வெளியேற்ற உத்தரவுகளையும் எச்சரிக்கைகளையும் கவனிக்குமாறு அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.

முர்ரே ஆறு, ஹெர்பர்ட் ஆறு, போல்லே ஆறுகள் மற்றும் மேல் பர்டேகின் நதிப் பகுதிகளும் ஆபத்தில் உள்ளன.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

சூடான வாக்குவாதங்களால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் ஹாக் பிரதமரை "நம்பிக்கையற்ற...