உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
Lancet Respiratory Medicine இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடம் 53 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டின் காரணமாக கிழக்கு ஆசியா மற்றும் சீனாவில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர்.
பெண்கள் மற்றும் ஆசிய மக்களிடையே மிகவும் பொதுவான அடினோகார்சினோமா, உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் ஐந்தாவது இடத்தில் இருப்பதாக அந்த இதழ் கூறுகிறது.
Adenocarcinoma-ஆல் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 200,000 பேர் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
கூடுதலாக, 2022 இல் செய்யப்பட்ட மதிப்பீட்டின்படி, 980,000 நுரையீரல் புற்றுநோயாளிகளில், 59.7 சதவீத பெண்கள் Adenocarcinoma புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.