Newsபாலினச் சமத்துவத்தைப் பொறுத்ததே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை – அமைச்சர் Benny...

பாலினச் சமத்துவத்தைப் பொறுத்ததே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை – அமைச்சர் Benny Wong

-

புதிய அனைத்துலக உத்தியின்கீழ் பாலினச் சமத்துவத்தைப் பொறுத்தே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை, அரசதந்திரம், வர்த்தகம், உதவித் திட்டங்கள் அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் புதன்கிழமையன்று (5ம் திகதி) தலைநகர் கேன்பராவில் தெரிவித்தார்.

பாலினச் சமத்துவம் நாட்டில் நிலவும் அமைதியைக் காட்டுவதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஐக்கிய நாட்டு நிறுவன நிகழ்வு ஒன்றில் அமைச்சர் வோங் கூறினார்.

பெண்களின் பாலியல், இனப்பெருக்க சுகாதார உரிமைகளைப் பாதுகாப்பதும் நிதி தொடர்பான விவகாரங்களில் பெண்களைச் சேர்த்துக்கொள்வதும் ஆஸ்திரேலியாவின் புதிய அனைத்துலகப் பாலினச் சமத்துவ உத்தியின் இலக்காகும்.

“உலகெங்கும் பெண்களுக்கு எதிராகப் பாலியல் ரீதியான வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதுமட்டுமல்லாது, பாலியல், இனப்பெருக்க சுகாதாரச் சேவைகள் போதுமான அளவில் அவர்களுக்குக் கிடைப்பதில்லை,” என்று வோங் கூறினார்.

பசிபிக் வட்டாரத்தில் மூன்றில் இரு பெண்கள் உடல்ரீதியிலான அல்லது பாலியல் ரீதியிலான வன்முறைக்கு ஆளாவதாக அவர் கூறினார்.

உலகளாவிய நிலையில், 380 மில்லியன் பெண்கள், சிறுமிகள் கடும் வறுமையில் வாடுவதாகவும் 2.4 பில்லியன் பெண்களுக்கு சமமான பொருளியல் வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...