மெல்பேர்ணின் பியூமாரிஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மூன்று கார்கள் திருடப்பட்டுள்ளன.
CCTV காட்சியிந் படி நேற்று அதிகாலை 6 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
நாய் கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்த அந்தக் குழு, ஒரு பணப்பை, கைக்கடிகாரங்கள் மற்றும் மூன்று கார்களைத் திருடிச் சென்றதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவை கருப்பு MX5, வெள்ளி நிற Audi Q5 மற்றும் கருப்பு நிற BMW X3 ஆகும்.
இந்த சம்பவம் குறித்து மத்திய காவல்துறை மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், திருடர்கள் கைது செய்யப்பட்டாலும், சரியான தண்டனை இல்லாததால் எந்த பலனும் இல்லை என்று வீட்டு உரிமையாளர் குற்றம் சாட்டுகிறார்.