SpaceX, Tesla உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலக பணக்காரருமாக எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின் கீழ் அரசு செயல்திறன் துறை [DODGE] தலைவராக உள்ளார்.
இந்நிலையில் வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் Open AI நிறுவனத்தின் மீது எலான் மஸ்கின் கண்கள் விழுந்துள்ளது. Chat GPTஉள்ளிட்ட Ai சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக செம் ஆல்ட்மேன் உள்ளார். 2015 இல் Open Ai நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.
ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், Open AI நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Open AI நிறுவனத்தை 97.4 பில்லியன் டொலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு நேற்று அந்நிறுவனத்திடம் ப்ரொபோஸ் செய்துள்ளது.
ஆனால் இதற்கு சாம் ஆல்ட்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சாம் ஆல்ட்மேன், “வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டொலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.