ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடத்திற்கான சமீபத்திய விசா வகை குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு துறைகளில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சாதனைகளை வெளிப்படுத்திய தனிநபர்கள் நாட்டில் நிரந்தர வதிவிடத்தைப் பெற அனுமதிக்கும் வகையில் National Innovation visa (Subclass 858) என்ற புதிய விசா வகை அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்னர் இருந்த Global Talent Visa (Subclass 858) மற்றும் The Business Innovation and Investment Visa (Subclass 188) விசா வகைகளை இணைத்து இது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள்/தொழில்முனைவோர்/புதுமையாளர்கள்/விளையாட்டு வீரர்கள் மற்றும் படைப்பாளிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
அவர்கள் முதலில் ஒரு EOI விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தகுதியுடையவராக இருந்தால், ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒரு அழைப்பை அனுப்பும்.
இந்த விசா வகைக்கு எந்த வயதினரும் விண்ணப்பிக்கலாம், மேலும் விசா கட்டணம் குறைந்தபட்சம் $4,840 ஆக இருக்கும்.
போதுமான ஆங்கில மொழித் திறன்களும் கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.