எமிரேட்ஸ் விமானத்தில் ஆஸ்திரேலியா வந்த ஒருவருக்கு தட்டம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மெல்பேர்ணில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
மெல்பேர்ணில் வசிக்கும் அவர், பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துவிட்டு சமீபத்தில் ஆஸ்திரேலியா திரும்பினார்.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK408 இல் வந்த அந்த நபர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த விமானத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு தட்டம்மை அறிகுறிகளைக் கண்காணிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன், பயணிகள் தங்கள் தடுப்பூசிகள் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
தட்டம்மை தற்போது பாகிஸ்தானில் பரவலாகப் பரவி வருகிறது. அங்கு சென்ற ஒன்பது ஆஸ்திரேலியர்களுக்கு தட்டம்மை இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், வியட்நாம், தாய்லாந்து, இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் தட்டம்மை பரவல் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.