மெல்பேர்ண் மிருகக்காட்சிசாலையில் இருந்து ஒன்பது ஆசிய யானைகள் Werribee திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு மாற்றப்பட்டுள்ளன.
5 நாள் முன்னெடுக்கப்பட்ட பல சோதனைகளுக்கு பிறகு இந்த இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
40 ஆண்டுகளில் Werribee திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு யானைகள் வருகை தருவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விலங்குகள் தற்போது அவற்றின் புதிய சூழலுக்குப் பழகி வருவதாக மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், அவற்றைப் பார்க்க விக்டோரியர்கள் பல வாரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று மேலும் கூறப்படுகிறது.