விக்டோரியா மாநிலத்தில் E – Scooterகளின் பயன்பாடு தொடர்பாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக மெல்பேர்ண் CBD-யில் E – Scooterகளை வாடகைக்கு எடுப்பது சமீபத்தில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூரோன் மற்றும் லைம் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்த பிறகு, மெல்பேர்ண் நகர சபை அந்தப் பகுதியிலிருந்து சுமார் 1,500 E – Scooterகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
இருப்பினும், தனியாருக்குச் சொந்தமான E – Scooter இன்னும் நகரத்தில் இயங்க முடியும் என்று கூறப்படுகிறது.
யாரா நகர சபையும் E – Scooter பயனர்களுக்கு நட்பு கொள்கையை ஏற்க முடிவு செய்துள்ளது.
இப்பகுதியில் E – Scooterகளுக்கான பார்க்கிங் இடங்களை படிப்படியாக தயார் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.