மெல்பேர்ண் மிருகக்காட்சிசாலையில் கொரில்லா திடீரென இறந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கிமியா என்று அழைக்கப்படும் குறித்த கொரில்லா இறக்கும் போது அதற்கு 20 வயது ஆகும்.
கிமியா 2013 ஆம் ஆண்டு டொரோங்கா பாதுகாப்பு சங்கத்திலிருந்து மெல்பேர்ண் மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அது ஒட்டானா என்ற 24 வயது ஆண் கொரில்லாவுடன் வசித்து வந்தது.
இந்த தம்பதியருக்கு 2015 ஆம் ஆண்டு கான்சி என்ற பெண் குழந்தை பிறந்தது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு மெல்பேர்ண் மிருகக்காட்சிசாலையில் பிறந்த முதல் கொரில்லா கான்சி ஆகும்.
கிமியா புத்திசாலி, விசாரிக்கும் தன்மை கொண்டவள், சுதந்திரமானவள் என்று மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.