திரைப்பட தயாரிப்பாளர்களிடையே மிகவும் பிரபலமான இடங்கள் குறித்து ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த இடங்களில் சிட்னி ஓபரா ஹவுஸ் முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்காவிற்கு வெளியே அதிக படங்கள் படமாக்கப்பட்ட இடமாக இது கருதப்படுகிறது.
சிட்னி ஓபரா ஹவுஸில் இதுவரை சுமார் 161 படங்கள் படமாக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரம் மற்றும் லூவ்ரே அருங்காட்சியகம் முறையே ஆக்கிரமித்துள்ளன.
மேலும், ஜப்பானில் உள்ள டோக்கியோ கோபுரம் நான்காவது இடத்திலும், நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் ஐந்தாவது இடத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.