உலகில் சர்வதேச மாணவர்களுக்கு சிறந்த நகரங்கள் எது என்பது குறித்து ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 2024-2025 கல்வியாண்டிற்கான QS தரவு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் மெல்பேர்ண் நகரம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
அதனை தொடர்ந்து சிட்னி நகரம் ஏழாவது இடத்தில் உள்ளது.
இந்த தரவரிசையில் இங்கிலாந்தின் லண்டன் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் ஜப்பானின் டோக்கியோ மற்றும் தென் கொரியாவின் சியோல் நகரங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.