அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை ட்ரம்ப் தீவிரப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த 200 பேரை விமானம் மூலம் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவுக்கு விமானம் மூலம் நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அங்கிருந்து அகதிகள் முகாம்களுக்கு அழைத்து செல்லப்படும் 200 பேரும் பின்னர் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் .
அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் சட்டவிரோத குடியேறிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் பாலமாக கோஸ்டாரிகா செயல்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நன்றி தமிழன்