புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
புற்றுநோய்க்கான M.R.N.A தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய பணிப்பாளர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்..
இந்த தடுப்பூசியானது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் சந்தையில் அறிமுகமாகவுள்ளதோடு எந்தவித கட்டணமுமின்றி நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோய் கட்டி வளர்வதை தடுப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ரஷ்ய ஜனாதிபதி , புற்றுநோய் தடுப்பு மருந்து உருவாக்கத்தினை கிட்டத்தட்ட நெருங்கி விட்டதாக தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் தற்போது அது குறித்து ரஷ்யா அறிவித்துள்ளது.
புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் புற்றுநோய் பாதிப்பு கொண்ட செல்களை அடையாளம் கண்டு அழிக்கும் பணியை இந்த தடுப்பூசிகள் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.