புனித திருத்தந்தை பிரான்சிஸ் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருக்கு இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா ஏற்பட்டதாக வத்திக்கான் நேற்று தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வத்திக்கானில் கலைஞர்களுடனான சந்திப்பு உட்பட பல நிகழ்வுகளைத் தவறவிட்டதால், பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை போப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு வத்திக்கான் பாதிரியார் அவருக்காக ஞாயிற்றுக்கிழமை ஆராதனையை நடத்தியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் நீண்ட காலமாக காய்ச்சல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி உள்ளிட்ட நுரையீரல் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.
21 வயதில், கடுமையான சுவாச நோய் காரணமாக அவரது வலது நுரையீரலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியிருந்தது என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.