Newsமீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

-

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் கொண்டிருக்கிறது.

நச்சுயிரியல் வல்லுநரான Shi Shengli தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. வௌவால் கொரோனா வைரஸ்கள் குறித்து Shi Shengli மேற்கொண்ட ஆய்வுகளில் வூஹான் பல்கலைக்கழகம் மற்றும் வூஹான் நச்சுயிரியல் மையத்தின் கீழ் இயங்கும் ஆங்சூ ஆய்வகம் மற்றும் ஆங்சூ அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி உள்ளனர்.

புதிய வகை கொரோனா வைரஸ் HKU5 என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் ஜப்பானை சேர்ந்த Pipistrel வகை வௌவால்களில் காணப்பட்டது. இந்த வைரஸூம் மனிதர்களின் சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதுவும் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் ACE 2, அதாவது முந்தைய சார்ஸ்-கோவி-2 வைரஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.

“வௌவால் ACE 2 மட்டுமின்றி மனித ACE 2 மற்றும் வெவ்வேறு இனங்களின் மரபணுக்களை பாதிக்கும் ACE 2 வகையை சேர்ந்த HKU5-CoV-ஐ கண்டுபிடித்திருப்பதை அறிவிக்கிறோம்,” என சீன குழு இதழ் ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸை வௌவால்களில் இருந்து தனிமைப்படுத்தினால், அவை மனிதர்களிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களுக்கு சுவாசம் மற்றும் குடல் உறுப்புகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று உருவானது எப்படி என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், சீன ஆய்வகத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக உலகளவில் நம்பப்படுகிறது. இதுதவிர கொரோனா வைரஸ் வௌவால்களில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவியதாகவும் கூறப்படுகிறது.

Latest news

பட்டினியால் வாடும் 50,000 ஆஸ்திரேலியர்கள்

ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 50,000 ஆஸ்திரேலியர்கள் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. OzHarvest என்ற தொண்டு நிறுவனம் சமீபத்தில் நடத்திய...

விக்டோரியன் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல்

விக்டோரியாவின் Mornington தீபகற்பத்தில் உள்ள Cape Schanck பகுதியில் ஒரு மனித உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த உடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி இறந்த ஒருவருடையது...

அதிக வரி வசூலைப் பதிவு செய்துள்ள விக்டோரியா

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024 நிதியாண்டில் சாதனை அளவு வரியை வசூலித்துள்ளது. ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் கூறுகையில், $802 பில்லியன் என்பது முந்தைய ஆண்டை விட $46.2 பில்லியன்...

ஹாமில்டனில் London plane மரங்களை அகற்றுவது குறித்த விவாதம்

விக்டோரியாவின் ஹாமில்டன் நகரில் 100 London plane மரங்களை அகற்றுவது குறித்து சூடான விவாதம் நடந்துள்ளது. மரங்களின் வேர்கள் நடைபாதைகள், கட்டிடங்கள் மற்றும் நீர் குழாய்களை சேதப்படுத்துகின்றன....

அதிக வரி வசூலைப் பதிவு செய்துள்ள விக்டோரியா

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024 நிதியாண்டில் சாதனை அளவு வரியை வசூலித்துள்ளது. ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் கூறுகையில், $802 பில்லியன் என்பது முந்தைய ஆண்டை விட $46.2 பில்லியன்...

மின்-சைக்கிள் சார்ஜரால் தீப்பிடித்த வீடு

அடிலெய்டில் உள்ள ஒரு வீடு, மின்-பைக் சார்ஜரால் ஏற்பட்ட தீ விபத்தில் மோசமாக சேதமடைந்துள்ளது. நேற்று காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது, ​​ஒரு பெண்ணும்...