மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும் வகையில் அதிக ஆக்ஸிஜனை வழங்க மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 14 ஆம் தேதி, போப் பிரான்சிஸ் உடல்நிலை மோசமடைந்ததால் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை இன்னும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.
போப் நீண்ட காலமாக சுவாசப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் செர்ஜியோ அல்ஃபியர், அவரது சுவாச அமைப்பில் உள்ள சில கிருமிகள் இரத்த ஓட்டத்தில் நுழையும் அபாயம் இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.