பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த 69 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவவிடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை கைது செய்தனர்.
இந்த தாக்குதலை நடத்தியவர் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.