சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஓர் பகுதியாக ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட மனித அமைப்பிலான ரோபோக்களின் குழு ஒன்றின் கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
அப்போது, குழுவிலிருந்து விலகிய ரோபோ ஒன்று அதன் எதிரில் ஆராவாரம் செய்து கொண்டிருந்த மனிதர்களை நோக்கி நகர்ந்து மோதுவதைப் போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அந்த ரோபோவை தடுத்து நிறுத்தி செயலிழக்க வைத்தனர்.
குறித்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் சாதாரன தொழில்நுட்பக் கோளாறினால் அந்த ரோபோ இவ்வாறு செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.