ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தனியார் பான நிறுவனம் தனது தயாரிப்பான ஆரஞ்சு பழச்சாறு வாங்குவதைத் தவிர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடித்துள்ளது.
இந்த ஆரஞ்சு சாறு பானத்தில் Alcohol மற்றும் Carbonation உள்ளதால், பாட்டில் உடைந்து போகும் அல்லது பாட்டில் மூடி கழன்று சிந்தும் அபாயம் இருப்பதாக Strangelove பான நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
அதன்படி, கடைகளில் இருந்து 180ml மற்றும் 54ml உப்பு ஆரஞ்சு சாறு பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆரஞ்சு பழச்சாறு பானத்தை ஏற்கனவே பெற்ற நுகர்வோர், அதைத் திறக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறும் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
ஆரஞ்சு சாறு உட்கொள்வதால் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு Strangelove பான நிறுவனம் எச்சரிக்கிறது.
ஆரஞ்சு சாறு பானம் ஏற்கனவே Coles, Woolworths, Don Murphys, BWS, Liquorland, First Choice, சுயாதீன சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மற்றும் Vintage online விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.