பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லா சான் கடந்த 24ம் திகதி தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பெப்ரவரி 24, 1985 இல் பிறந்த இவர், ஒரு அமெரிக்க குழந்தை மருத்துவர் மற்றும் கொடையாளர் ஆவார்.
அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார் மற்றும் சான் பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.
2012 இல் திருமணம் செய்து கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரிஸ்கில்லா சான், இப்போது மூன்று குழந்தைகளுக்கு பெற்றோர்.
மார்க் ஜுக்கர்பெர்க் தனது சமூக ஊடகக் கணக்கில் பிரிஸ்கில்லா சானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து “என் அன்புக்குரிய பிரிசில்லாவுக்கு 40 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இன்னும் பல மகிழ்ச்சியான ஆண்டுகள் வரட்டும்”, என ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.