பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள்.
பப்புவா நியூ கினியா நில உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக கடந்த செப்டம்பர் முதல் இது மூடப்பட்டுள்ளது.
உள்ளூர் நில உரிமையாளர்களுக்கும் பப்புவா நியூ கினியா அரசாங்கத்திற்கும் இடையே பல மாதங்களாக நடந்த கலந்துரையாடல்களுக்குப் பிறகு, கோகோடா பாதையை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், அதிக அளவிலான குற்றங்கள், வன்முறை மற்றும் உள்நாட்டு அமைதியின்மை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசாங்கம் எச்சரிக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் ஜப்பானிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் இடையே கடுமையான போர்கள் நடந்த இடமாக கோகோடா இருந்ததாக வரலாறு கூறுகிறது.