விக்டோரியா மாநிலத்தில் மருத்துவ கஞ்சாவைப் பயன்படுத்தும் நோயாளிகள் சிறப்பு நிவாரணத்திற்குத் தகுதியுடையவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, மார்ச் முதலாம் திகதி முதல், மருத்துவ நிலைமைகளுக்காக மருத்துவ கஞ்சாவைப் பெறும் விக்டோரியர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தானாகவே ரத்து செய்யப்பட மாட்டாது.
எதிர்காலத்தில் போதைப்பொருள் பாவனையில் வாகனம் ஓட்டியதற்காக இந்த நோயாளிகள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது.
விக்டோரியன் பாராளுமன்றம் நவம்பர் 19, 2024 அன்று இந்தச் சட்டங்களைத் திருத்தியது.
அதன்படி 1986 ஆம் ஆண்டு சாலை பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், நோயாளிகள் வாகனம் ஓட்டும்போது மருந்துச் சீட்டுகளை ஆதாரமாக எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விக்டோரியாவில் மருத்துவ கஞ்சாவைப் பயன்படுத்தும் நோயாளிகளுக்கு இது ஒரு முக்கியமான படியாகும் என்று Cannabis Club Australia-வின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஹட்சன் வலியுறுத்தினார்.