புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போப் இன்னும் மூச்சு விடுவதில் சிரமப்படுவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
இதன் விளைவாக, அவருக்கு செயற்கையாக ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது.
இருப்பினும், போப்பின் தற்போதைய உடல்நிலையை உறுதியாகக் கண்டறிய 24 முதல் 48 மணி நேரம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
88 வயதான போப் பிரான்சிஸ், கடந்த 14 ஆம் திகதி ரோமில் உள்ள கேமலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.