அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13 வயது சிறுவனை அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக நியமித்துள்ளார்.
டிஜே என்ற மைனர் ஒருவர் ரகசிய புலனாய்வு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் குழந்தைக்கு 6 வருடங்களுக்கு முன்பு மூளைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும், அவர் தற்போது நோயிலிருந்து மீண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குழந்தை அமெரிக்க பாதுகாப்பு சேவையில் சேர மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனால்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தக் குழந்தையை அமெரிக்க ரகசிய முகவராக நியமித்துள்ளார்.