ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ண் நகருக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல்பிரட் என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி, பலத்த மழையையும், மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் ஆயிரக்கணக்கான சொத்துக்கள் ஆபத்தில் சிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலைக்கு தயாராகும் வகையில், நாட்டில் உள்ள பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்களை வேறு இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.