இரண்டு முறை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
88 வயதான போப், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருக்கிறார்.
இருப்பினும், அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது.
பல நாட்களாக சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்ட போப் பிப்ரவரி 14 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போப்பின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் இன்னும் கடுமையான நோயிலிருந்து முழுமையாக குணமடையவில்லை என்றும் வத்திக்கான் கூறுகிறது.