அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ICC சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதியில் 73 ஓட்டங்களை குவித்த ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
மேலும், ஸ்மித் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் T20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளது.