ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள ஒரு திரையரங்கம், உலகின் மிக அழகான 10 திரையரங்குகளில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளது.
அதன்படி, Timeout பத்திரிகை நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில் மெல்பேர்ணின் Astor தியேட்டர் 7வது இடத்தைப் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.
கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட Astor சினிமா, ஆஸ்திரேலியாவின் பழமையான திரையரங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மெல்பேர்ணின் St Kilda பகுதியில் கட்டப்பட்டுள்ள Astorவ் சினிமா தற்போது சுமார் 90 வயதுடைய ஒருவருக்குச் சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தரவரிசைப்படி, உலகின் மிக அழகான சினிமா பிரான்சின் பாரிஸில் உள்ள Le Grand Rex ஆகும்.
கூடுதலாக, நெதர்லாந்து, அமெரிக்கா, ஸ்பெயின், கிரேட் பிரிட்டன், இத்தாலி மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் உள்ள திரையரங்குகளும் முதல் 10 இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஸ்பெயினில் இரண்டு திரையரங்குகளும், பிரான்சில் இரண்டு திரையரங்குகளும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.