Newsவானில் வெடித்து சிதறிய Starship-8 விண்கலம்

வானில் வெடித்து சிதறிய Starship-8 விண்கலம்

-

அமெரிக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 8 விண்கலமானது தெற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 6ம் திகதி விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 9.30 நிமிடங்களில் ரொக்கட்டுடனான தொடர்பை கட்டுப்பாட்டு அறையினர் இழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட வான்வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்களை நிறுத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்பிறகு, கட்டுப்பாட்டை இழக்கும் பட்சத்தில் ரொக்கெட் தானாக வெடித்துச் சிதறும் வகையில் செய்யப்பட்டிருந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெடிக்க வைத்துள்ளனர்.

ரொக்கெட்டின் எரிந்த பாகங்கள் கரீபியன் கடற்பகுதியில் விழுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரொக்கெட்டின் பாகங்கள் விழுந்த பகுதிக்கு அருகிலிருந்த 5 விமானங்கள் இரவுவரை தற்காலிகமாக மூடப்பட்டன. அங்கு தரையிறங்க இருந்த விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்,

“ரொக்கெட் குப்பைகளில் எந்த நச்சுப் பொருட்களும் இல்லை, இதனால், கடல் உயிரினங்கள் மற்றும் நீரின் தரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.இதுபோன்ற சோதனையின் மூலம், நாம் கற்றுக் கொள்வதில் இருந்து வெற்றி கிடைக்கிறது. இன்றைய ஸ்டார்ஷிப், நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவும்.

அமெரிக்க விமானத் துறையுடன் இணைந்து முழுமையான விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.

Latest news

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

விக்டோரியாவிற்கு பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள்

விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள்...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...