இந்த ஆண்டு மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.
அதன்படி, மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் பதவி தொழிலாளர் கட்சி வேட்பாளர் ரோஜர் குக்கிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, பதிவான வாக்குகளில் 61.7 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
ஆளும் தொழிலாளர் கட்சி அங்கு 40 இடங்களை வென்றுள்ளது.
இருப்பினும், இந்த தேர்தலில் லிபரல் கட்சி 5 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.
மேலும், தேசியக் கட்சியும் 04 ஆசனங்களைப் பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.